மும்பை: ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ராமாயணம்’. அவதார் , இண்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்த DNEG நிறுவனம் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பாண்டிகைக்கும் உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் தகவல்களின் படி, இந்தப் பிரமாண்டமான படத்திற்கு அவர் ரூ.30 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்படும் உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரன்பிர் கபூர்,சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, லாரா தாத்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில், இரு பாகங்கள் சேர்த்து ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர் இணைந்திருப்பதன் காரணமாக, ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
