ரூ.30 கோடியில் வீடு வாங்கிய ஸ்ரேயா கோஷல்

மும்பை: மும்பையில் ரூ.30 கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் ஸ்ரேயா கோஷல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல், கடந்த 23 வருடங்களாக இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழிலும் தொடர்ந்து ஹிட் பாடல்களை பாடி வருகிறார். தற்போது தெற்கு மும்பையில் வொர்லி பகுதியில், சுமார் 29.7 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுகுறித்த தகவல், பத்திரப்பதிவு துறையில் இருந்து சோஷியல் மீடியாவில் கசிந்தது. 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட, 2750 சதுர அடி கட்டுமானம் கொண்ட, 3 கார் பார்க்கிங் வசதி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை ஸ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார். இதற்காக 1.78 கோடி ரூபாய் முத்திரைக்கட்டணம் செலுத்தியுள்ளார். ஒரு பாடலுக்கு சுமார் ரூ.25 லட்சம் சம்பளமாக பெரும் ஸ்ரேயா கோஷலின் நிகர சொத்து மதிப்பு ரூ.185 கோடி முதல் 240 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: