மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படம், இந்த மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தணிக்கை குழுவினர், இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். டிஜிட்டல் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் மஞ்சு வாரியர், சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக், அதுல்யா ரவி, ரைசா வில்சன், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், அனஹா நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.
