கூட்டத்தில் அத்துமீறி வந்து மஞ்சு வாரியருக்கு லிப் கிஸ் தந்த பெண்: பரபரப்பு சம்பவம்

சென்னை: கூட்டத்தில் அத்துமீறி நடிகை மஞ்சு வாரியருக்கு லிப் கிஸ் தந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகைகள் கடை திறப்பு விழாவுக்கு வரும்போது, அங்கு அவர்களிடம் அத்துமீறி ரசிகர்கள் நடந்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த முறை பெண் ஒருவர் அதுபோல் அத்துமீறி நடந்துகொண்டது, பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. கேரள மாநிலம், கொச்சியில் கடை திறப்பு விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்தார்.

விழா முடிந்ததும் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது 40 வயதுடைய பெண் ஒருவர் விழா மேடையில் அத்துமீறி நுழைந்தார். பிறகு மஞ்சு வாரியரை நோக்கி அவர் வந்தபோது, அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுக்க முயன்றனர். ஆனால் மற்றவர்களை தள்ளிவிட்டு, திடீரென மஞ்சு வாரியரை பிடித்து அவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வால் மஞ்சு வாரியர் அசௌகரியமாக உணர்ந்தார். பிறகு சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வை பார்த்த பார்வையாளர்கள் பலரும் அத்துமீறிய பெண்ணின் செயலால் முகம் சுழித்தனர்.

Related Stories: