தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் பரத், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் லாஸ்ட் 6 ஹவர்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். அவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், தயாரிப்பாளர் அனூப் காலித் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சினு சித்தார்த். இசை, கைலாஷ் மேனன். படம் குறித்து இயக்குனர் சுனிஷ் குமார் கூறுகையில், ‘வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நான்கு இளைஞர்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு திருட்டை செய்து, ஒரே நேரத்தில் மொத்தமாக செட்டிலாக தீர்மானிக்கின்றனர்.