5 மொழிகளில் ஜீவனின் பாம்பாட்டம்

ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இசை, அம்ரீஷ். பாடல்கள், யுகபாரதி. தயாரிப்பு: வி.பழனிவேல், பண்ணை இளங்கோவன். இயக்கம், வி.சி.வடிவுடையான். அவர் கூறுகையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தொடர்ந்து நான் இயக்கும் திகில் கதை இது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஐதராபாத் மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.

Related Stories: