கமல் படத்திலிருந்து வெளியேறிய நடிகை

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிறது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் என 3 ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது,’இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது உண்மைதான்.

கால்ஷீட் தேதி ஒத்துவராததே இதற்கு காரணம். பட தரப்பு கேட்கும் கால்ஷீட் தேதிகளை என்னால் ஒதுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். ஷங்கர் சார், கமல் சார் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது நனவாகும் தருணத்தில் அதை தவறவிடுகிறேன் என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறேன்’ என்றார்.

Related Stories: