திருநங்கையாக நடிக்கிறார் அமிதாப்

தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தின் ரீமேக் இந்தியில் உருவாகிறது. இந்த படத்துக்கு லட்சுமி பாம் என தலைப்பிட்டுள்ளனர். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். அக்‌ஷய்குமார், கியரா அத்வானி நடிக்கிறார்கள். லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய் நடிக்கும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.

தமிழில் திருங்கை வேடத்தில் சரத்குமார் நடித்த வேடத்தில்தான் அமிதாப் நடிக்க இருக்கிறார். கடந்த பல வருடங்களாக தனது குறுந்தாடி, மீசையுடனே அமிதாப் அனைத்து படங்களிலும் நடித்து வந்தார். இந்த படத்துக்காக அவர் குறுந்தாடி, மீசையை எடுக்க இருக்கிறாராம்.

Related Stories: