வம்சம் வாழையடி வாழையாக வளரச் செய்ய; தீராத நோய் தீர சமயபுரம் மாரியம்மனை வழிபடுங்கள்..!!

சக்தி வாய்ந்த சமயபுரத்தாளை வேண்டுங்கள். தீயசக்தியிடம் இருந்தும் கொடிய நோய்களிலிருந்தும் காத்தருள்வாய் என்று அம்மனுக்கு மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்துவைத்து வேண்டிக்கொள்ளுங்கள். சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாக காஞ்சி காமாட்சி திகழ்கிறாள். என்றாலும் அபயக்கரம் நீட்டுகிற சக்தி பீடமாகவே திகழ்கிறது திருச்சி சமயபுரம் திருக்கோயில். மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைவி, சமயபுரத்தாள்தான் என்கின்றனர் பக்தர்கள்.

எடுக்கின்ற காரியம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறதே என்று தவிப்பவர்கள், ஒருமுறை சமயபுரம் சந்நிதியில் மாரியம்மனிடம் முறையிட்டு வந்தால் போதும்... தடைகளையெல்லாம் தகர்த்து நம்மை காரியங்களில் வெற்றி பெறச் செய்வாள். கண்ணில் பிரச்சினை, கைகால் குடைச்சல், நெஞ்சுப் பகுதியில் வலி, குழந்தை பாக்கியம் இல்லை என்று நோயாலும் புத்திர பாக்கியம் வேண்டியும் கண்ணீர் விடுபவர்கள், திருச்சி சமயபுரத்துக்கு வந்து, உடலில் எந்த பாகத்தில் பிரச்சினையோ... அந்த உருவத்தை காணிக்கையாகச் செலுத்தி வேண்டிக்கொண்டால்... விரைவில் குணமாகும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

வீட்டில் திருஷ்டி பட்டிருக்கிறது என்று நினைப்பவர்கள், சமயபுரத்தாளுக்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்துவைத்து வேண்டிக்கொண்டால் போதும்... திருஷ்டியையெல்லாம் கழித்து விடுவாள்.தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். உங்கள் வம்சத்தை, வாழையடி வாழையாக வளரச் செய்வாள். செழிக்கச் செய்வாள். உங்கள் வீட்டின் எல்லையம்மானவே திகழ்ந்து காப்பாள் சமயபுரம் மாரியம்மன்.

Related Stories: