பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் நோய்த்தொற்று கருத்தரங்கம்

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் நோய்த்தொற்று 2022, வைரஸ் விகாரியின் வேறுபாட்டில் இருக்கும் தற்போதைய போக்கும் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் ஸ்ரீதேவி புகழேந்தி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பியூலா பத்மாவதி வரவேற்றார். சென்னை விஎச்எஸ் தொற்று நோய் மருத்துவ மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் என்.குமாரசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். முதல் அமர்வில் கருத்தரங்கத் தலைவர் இளஞ்செழியன் மாணிக்கம், கிங்ஸ் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் அமுதவேணி, வைரஸ்களின் தேசிய நிறுவன மருத்துவர் அனுராதா மிஸ்ரா திரிபாதி ஆகியோர் மனித உடல்நலத்தில் வைரஸ் விகாரின் வேறுபாட்டை அறிதல் என்ற தலைப்பில் உரையாற்றினர். இரண்டாவது அமர்வில் தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயராணி தலைமையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் ஸ்டாலின்ராஜ், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் லூக் எலிசபெத் ஆகியோர் வைரஸ் விகாரியின் வேறுபாட்டை எதிர்க்கும்போது ஏற்படும் சவால்களை கண்டறிதல் என்ற தலைப்பில் உரையாற்றினர். முடிவில், அபெக்ஸ் ஆய்வக முதுநிலைப் பொது மேலாளர் மருத்துவர் அனூப் ஆஸ்டின் நிறைவுரையாற்றி சிறந்த கட்டுரைகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்….

The post பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் நோய்த்தொற்று கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: