சென்னை சென்ட்ரலில் வேலை செய்யும் ஹீரோ

சென்னை: கடுமையான உழைப்புக்கு சாதி, மதம், இனம், மொழி என்ற பேதம் எதுவும் கிடையாது என்ற கருத்தை சொல்லும் படமாக ‘சென்ட்ரல்’ உருவாகியுள்ளது. ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். ‘காக்கா முட்டை’ விக்னேஷ் கதையின் நாயாகனாக நடித்துள்ளார். மற்றும் சோனேஸ்வரி, பேரரசு, ‘சித்தா’ தர்ஷன், ‘ஆறு’ பாலா, ‘மேதகு’ ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் நடித்துள்ளனர்.

‘காடப்புறா கலைக்குழு’ வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்ய, இலா இசை அமைத்துள்ளார். விது ஜீவா எடிட்டிங் செய்ய, சேது ரமேஷ் அரங்கம் அமைத்துள்ளார். ஜான் மார்க் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘குடும்ப சூழ்நிலை காரணமாக கிராமத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து வேலை செய்யும் ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து எப்படி மீள்கிறான் என்பது கதை’ என்றார்.

Related Stories: