விமர்சனம்

 

டும்ப பிரச்னை காரணமாக ரோஸ்மின் குடும்பம் மதுரை பகுதியில் இருந்து சென்னைக்கு குடிபெயர்கிறது. கூலி வேலைகள் செய்யும் சென்ராயன், ரோஸ்மின் தங்கை தன்யாவை காதலிக்கிறார். அவரை ஏற்க மறுக்கும் தன்யா, தனது குடும்ப பிரச்னை தீர்ந்தால் அதுபற்றி யோசிக்கிறேன் என்று ெசால்கிறார். தன்யாவின் குடும்ப பிரச்னை தீர்ந்தால் அவர் தன்னை காதலிப்பார் என்ற நம்பிக்கையில், ரோஸ்மினின் திருமண பிரச்னையை தீர்த்து வைக்க சென்ராயன் முயற்சிக்கும்போது எதிர்பாராத பிரச்னையில் சிக்குகிறார். இந்நிலையில், இனிகோ பிரபாகரனை ரோஸ்மின் காத லிக்க தொடங்குகிறார். அப்போது ஏற்கனவே ரோஸ்மினுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த தேனி கே.பரமன், ரோஸ்மினை தேடி வருகிறார். பிறகு என்னென்ன நடக்கிறது என்பது மீதி கதை. கிடைத்த வாய்ப்பை இனிகோ பிரபாகரன் நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.

ரோஸ்மின், செகண்ட் ஹீரோ சென்ராயன், தன்யா, தேனி கே.பரமன், முனீஷ்காந்த், அப்புக் குட்டி, கிங்காங், கூல் சுரேஷ், மணிமேகலை, கொட்டாச்சி, மொசக் குட்டி இயல்பாக நடித்துள்ளனர். கதைக்கேற்ற ஒளிப்பதிவை சுரேஷ் குமார் வழங்கியுள்ளார். கெவின் டி.கோஸ்டாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளன. ஷாஜித் எடிட்டிங் கச்சிதமாக இருக்கிறது. எழுதி இயக்கிய தேனி கே.பரமன், காமெடி கலந்த காதலை சொல்லி இருக்கிறார். சில சின்னச்சின்ன குறைகளை கவனித்து தவிர்த்துஇருக்க வேண்டும்.

Related Stories: