படங்கள் வெற்றிபெற அதிர்ஷ்டம் காரணமா? கிரித்தி ஷெட்டி

சென்னை: இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர், கிரித்தி ஷெட்டி, இதற்கு முன்பு ராம் பொத்தினேனி ஜோடியாக ‘தி வாரியர்’, நாக சைதன்யா ஜோடியாக ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் தெலுங்கில் நேரடியாக வெளியாகி, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்டவை. தற்போது கார்த்தி ஜோடியாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பல்வேறு பிரச்னைகளால் அப்படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை. தவிர, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘எல்ஐகே’ என்ற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘எதிர்பாராமல் திரைத்துறைக்கு வந்தேன். நிறைய ஹிட் படங்களில் நடித்தேன். படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். பல நேரங்களில் அது கைகொடுக்காமல் கூட போகலாம். எனவே, அதிர்ஷ்டத்தின் மீது பழி போட்டு தப்பித்துவிடக்கூடாது. இன்னும் நாம் சிறப்பாக என்ன செய்திருக்கலாம் என்றுதான் யோசிக்க வேண்டும். அதுவே வெற்றிக்கான வழி’ என்றார்.

Related Stories: