பட்ஜெட்டை குறைத்தேன் ஒளிப்பதிவாளர் வீரமணி

சென்னை: கடந்த 2ம் தேதி இரு மொழிகளில் திரைக்கு வந்துள்ள படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ள வீரமணி கூறியதாவது: மாஸ் கம்யூனிகேஷன் படித்துமுடித்துவிட்டு, ஒளிப்பதிவில் டிப்ளமோ வாங்கினேன். பிறகு பிரபலமான ஒளிப்பதிவாளர்கள் எம்.சுகுமார், ஆர்.ரத்னவேலு ஆகியோரிடம் பணியாற்றினேன். நந்திதா ஸ்வேதா, ‘ஆடுகளம்’ கிஷோர் நடித்த ‘ஜெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். இப்போது தமிழ், தெலுங்கில் வெளியான ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். இதில் எனது ஒளிப்பதிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அதிகமான பாராட்டு கிடைத்துள்ளது.

முதலில் முகாம் நடத்தி நடிகர், நடிகைகளின் ஸ்கின் டோனை வீடியோ எடுத்தேன். எந்த லைட்டிங்கில் யாரை நடிக்க வைப்பது என்று திட்டமிட்டேன். அவரவருக்கு தேவையான லென்ஸ்களை பயன்படுத்தினேன். பகலில் ஆரி அலெக்ஸா, இரவில் சோனி வெனிஸ்-2 கேமராவில் ஒளிப்பதிவு செய்தேன். இரவு நேர காட்சிகளை கிடைத்த வெளிச் சத்தில் படமாக்கி, படத்தின் பட்ஜெட்டை குறைத்தேன். இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதற்கு பாராட்டு கிடைப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

Related Stories: