தந்தையின் பெருமையை பேசும் படம் ஃபாதர்

 

சென்னை: ‘கப்சா’ படத்துக்கு பிறகு ஆர்.சி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சந்துரு, யமுனா சந்திரசேகர் இணைந்து 5 மொழிகளில் தயாரித்துள்ள படம், ‘ஃபாதர்’. முதன்மை கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா நடித்துள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களுக்கு பிறகு இராஜமோகன் எழுதி இயக்கியுள்ளார்.

சுகுணன் ஒளிப்பதிவு செய்ய, நகுல் அப்யங்கர் இசை அமைத்துள்ளார். ஏ.ரகுநாத் எடிட்டிங் செய்ய, ஸ்ரீ காந்த் அரங்கம் அமைத்துள்ளார். மைசூரு, பெங்களூரு, குடகு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. விரைவில் இது திரைக்கு வருகிறது.

 

Related Stories: