மும்பை: இந்தி ‘நாகினி’ டி.வி தொடரில் அதிரடி வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், மவுனி ராய் (41). இந்தியில் 2004ல் வெளியான ‘ரன்’ படத்தில் அறிமுகமானார். பிறகு கன்னடம், பஞ்சாபி, தெலுங்கில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பகிரங்க பேட்டி வருமாறு: 21 வயதில் இருந்து திரைப்பட வாய்ப்பு தேடி அலைந்தேன். ஒரு இயக்குனர் ஆபீசுக்கு வரச்சொல்லி, நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக சொன்னார். அங்கு சென்றவுடன், திடீரென்று கதை சொல்லி என்னை முத்தமிட்டார். அவ்வளவுதான், நான் பயந்து நடுங்கினேன். இந்த சம்பவம் என் மனதில் ஆழமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றுள்ள நிலையை அடைய நான் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். இதுபோல் பலரை பார்த்திருக்கிறேன். இன்று எதற்கும் நான் பயப்பட மாட்டேன். காரணம், எனது திறமையை, கடின உழைப்பை மட்டுமே பெரிதும் நம்புகிறேன்.
