சென்னை: அபின் ஹரிஹரன் இயக்கிய ‘அதர்ஸ்’ என்ற படத்தில் ேபாலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர், ஆதித்யா மாதவன். தற்போது தஞ்சாவூரில் உருவாகும் ஒரு படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியில் வெளியான ‘அதர்ஸ்’, டாப் 3 படங்களில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. அடுத்து ‘கத்துக்குட்டி’, ‘நந்தன்’ இரா.சரவணன் இயக்கும் படத்தில், சீருடை அணியாத போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். வித்தியாசமான கதை, கேரக்டர் என்பதால், 8 மாதங்களுக்கு முன்பே விசேஷ பயிற்சி பெற்றேன்.
நடிப்பில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர இரா.சரவணனிடம் கற்றுக்கொண்டேன். நான் ரவி மோகன் தம்பி மாதிரி இருப்பதாக பலர் சொல்கின்றனர். அவரது தம்பி யாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு கிக் பாக்ஸிங் மற்றும் கராத்தே தெரியும். உதவி இயக்குன ராக, தயாரிப்பு நிர்வாகியாக, கேமரா அசிஸ்டெண்டாக இருந்துள்ள நான், இப்போது ஹீரோவாகி, நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறேன். யோகாசனம், தியானம்
செய்கிறேன். தினமும் இயக்குனர் களிடம் கதை கேட்கிறேன். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற
எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.
