சல்லியர்கள்: விமர்சனம்

சிங்கப் பிரதேசத்தின் ராணுவத்தை எதிர்த்து போரிடும் தமிழ்ப் பிரதேச அமைப்பினர் காயம் அடைந்தால், அவர்களை காப்பாற்ற போர்க்களத்தில் ‘மெடிக்கல் பங்கர்’ என்ற தற்காலிக பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படு
கிறது. அங்கு டாக்டர்கள் சத்யாதேவியும், மகேந்திரனும் பணியாற்றுகின்றனர். தமிழ்ப் பிரதேச அமைப்புகளின் மெடிக்கல் பங்கர்களை அழித்தால், அவர்களை வீழ்த்திவிடலாம் என்று திட்டமிடும் சிங்கப் பிரதேச ராணுவம், உடனடியாக விமான தாக்குதல் நடத்துகிறது. போராளிகள் என்றாலும், எதிரிகள் என்றாலும், உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற அந்த டாக்டர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

டாக்டராக சத்யாதேவி உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது பிளாஷ்பேக் மனதை உருக்குகிறது. மகேந்திரன் இயல்பாக நடித்துள்ளார். சத்யாதேவி தந்தையாக சேது கருணாஸ், தாயாக ஜானகி அம்மாள் கண்கலங்க
வைக்கின்றனர். ராணுவ அதிகாரி களாக திருமுருகன், சந்தோஷ், மோகன் அதிகமான வெறுப்பை சம்பாதிக்கின்றனர். காதலர்களாக, போராளிகளாக நாகராஜ், பிரியா லயா ஜோடி கவனத்தை ஈர்த்துள்ளது. கென், ஈஸ்வர் இசையில் வைரமுத்து, தி.கிட்டுவின் பாடல்கள் மனதில் ஊடுருவுகிறது.

பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, காட்சிகளை கண்முன் கொண்டு வந்துள்ளது. எடிட்டர் சி.எம்.இளங்கோவன், ஆர்ட் டைரக்டர் முஜிபுர் ரஹ்மானின் பணி கள் குறிப்பிடத்தக்கவை. எழுதி இயக்கிய தி.கிட்டு, எந்தவித பாகுபாடுமின்றி உயிரை காப்பாற்றும் குறிக்கோளுடன் செயல்படும் டாக்டர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். அடுத்தடுத்த காட்சியை யூகிக்க முடிவது பலவீனம். ‘ஓடிடி பிளஸ்’ தளத்தில் நேற்று முன்தினம் முதல் படம் வெளியாகியுள்ளது.

Related Stories: