சூரி நடிக்கும் மண்டாடி

சென்னை: ஆர்.எஸ் இன்ஃபோ டெயின்மெண்ட் சார்பில் இயக்குனர் எல்ரெட் குமார் தயாரிக்கும் 16வது படம், ‘மண்டாடி’. சூரி ஹீரோவாக நடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் இதை ‘செல்ஃபி’ மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்குகிறார். ‘மண்டாடி’ படத்துக்காக சூரி தனது தோற்றம் மற்றும் பாடிலாங்குவேஜை மாற்றி நடிக்கிறார் . தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். சூரி ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

முக்கியமான வேடங்களில் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் நடிக்கின் றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். டி.ஆர்.கே.கிரண் அரங்கம் நிர்மாணிக்க, வி.மணிகண்டன் இணை தயாரிப்பு செய்கிறார். ஸ்கிரிப்ட் ஒர்க்கில் ஆர்.மோகன வசந்தன், திரள் சங்கர் கூடுதல் பணியாற்று கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் கிரியேட்டிவ் புரொடியூசராக இருக்கிறார்.

படம் பற்றி மதிமாறன் புகழேந்தி கூறுகையில், ‘கடலில் மீன் பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்ப வரை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலுள்ள மீனவர்கள் ‘மண்டாடி’ என்று அழைக்கின்றனர். அப்படி மீன் பிடிக்க செல்லும்போது படகையும், அந்த மீனவர்களையும் வழிநடத்துவதை போல், பாய்மர படகு போட்டி நடக்கும்போதும் வழிநடத்த கூடிய ஒருவர்தான் மண்டாடி’ என்று சொன்னார்.

Related Stories: