சென்னை: சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆகக்கடவன’. எழுதி, இயக்கியுள்ளார் தர்மா. புதுமுகமான ஆதிரன் சுரேஷ் ஹீரோ. வின்சென்ட், சி.ஆர். ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது.
அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் ‘ஆகக் கடவன’ திரைப்படம். ஒளிப்பதிவு லியோ வெ ராஜா. இசை சாந்தன் அன்பழகன். படத்தொகுப்பு சுமித் பாண்டியன், புமேஷ் தாஸ். இயக்குனர் தர்மா கூறுகையில், ‘‘நாம பேசுற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கூறும் படமிது’’ என்றார்.
