ஓவர் போதையில் பிரியா வாரியர் உளறல் வீடியோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: போதையில் நடிகை பிரியா வாரியர் உளறும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை பிரியா வாரியர் சில வருடங்களுக்கு முன்பு அவரது கண்ணழகால் இந்திய அளவில் பிரபலம் ஆனவர். காதல் ஆதார் என்ற படத்தில் அறிமுகமாகிய பிரியா வாரியர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

குட் பேட் அக்லீ படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருந்தார். பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வரும் பிரியா வாரியர், பார்ட்டி ஒன்றில் தலைக்கேறிய போதையில் மது அருந்தி உளறிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனது தோழிகளிடம் அவர் கண்டபடி உளறியபடி பேசுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: