சென்னை: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ குறித்த கேள்விக்கு அளித்த பதில்: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றார்கள். திறமையான பாடகர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்தாமல் இறந்த பாடகர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்.
அந்த பாடகர்கள் எல்லாம் கொண்டாடப்பட்டு நல்ல இசையை மக்களுக்கு கொடுத்த பின்பே இறந்துள்ளனர். அவர்களது குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக கொண்டு வராமல் அவர்களது பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள். சினிமாவை விட இசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் இதை தெரிந்து கொண்டுள்ளேன். உலகளவில் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆசைப்படுகிறேன். அதனால் அதிக படங்களை ஏற்க முடிவதில்லை என்றார்.