வடசென்னை கதையில் மஞ்சுளா

இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மாஸ் ரவி, தற்போது ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, ஆதித்யா கதிர், ‘கல்லூரி’ வினோத், ஆறு பாலா, தங்கதுரை, பிரியதர்ஷினி ராஜ்குமார், சந்தீப் குமார், ‘கபாலி’ விஷ்வந்த், மஞ்சுளா, மொசக்குட்டி, மிப்பு, மேனக்‌ஷா, பத்மன், சத்யா, பிரியங்கா நடித்துள்ளனர்.

சென்னை புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.எழில் இனியன், ச.ராசாத்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுபாஷ் மணியன், ராஜதுரை இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜீ.கே.வி, மிக்கின் அருள்தேவ் இணைந்து இசை அமைத்துள்ளனர். வடசென்னையை பின்னணியாக வைத்து, காதலைப் பற்றி புதிய கோணத்தில் சொல்லும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக நடிக்கும் மஞ்சுளா, முன்னணி நடிகையாக இருந்த மஞ்சுளாவின் பெயரை வைத்திருந்தாலும், தற்போது தனக்கு புதிய பெயர் சூட்டிக்கொள்ள விரும்பவில்லையாம்.

Related Stories: