ஐதராபாத்: முன்னணி நடிகை அனுஷ்காவுக்கு 44 வயது ஆகிறது. இந்நிலையில், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வருகிறார் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து கூறியிருப்பதாவது: அனுஷ்காவை பற்றிய திருமண செய்திகளில் எந்த உண்மைகளும் கிடையாது. தற்போது அவர் நடிப்பு மற்றும் புதிய கதைகளை கேட்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
அனுஷ்காவின் வயதுக்கு தரப்படும் தேவையற்ற கவனமும், ஒவ்வொரு பதிவிலும் ‘44’ என்ற எண்ணை ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை போல் முன்னிலைப்படுத்துவதும் வருத்தம் அளிக்கிறது. வயது என்பது இவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தால், ஹீரோக்கள் மீது மட்டும் வயது விஷயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லையே, ஏன்? பெண்களுக்கு மட்டும் வயது விஷயத்தை பிரச்னையாக்குவது ஏன்? ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களையும் மதியுங்கள்.
