மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ என்ற படத்தில், பாண்டியம்மா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இந்திரஜா, கடந்த 2024ல் இயக்குனர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நட்சத்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. சமீபத்தில் இந்திரஜா அளித்திருந்த பேட்டியில், தனது குடும்பத்தை பற்றி வரும் வதந்திகள் குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், ‘எனக்கு திருமணமான நாள் முதல் இன்று வரை, பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். குறிப்பாக, நான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும், டெஸ்ட் டியூப் பேபி என்றும் பலர் பேசுகிறார்கள். உண்மை குறித்து எதுவும் தெரிந்துகொள்ளாமல் இப்படி பேசுவது அதிக வேதனையை அளிக்கிறது. ஒரு பெண் தாயாக மாறும்போது, அவள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்துகொள்ள வேண்டும். உண்மை தெரியாமல் குற்றம் சாட்டாதீர்கள்’ என்றார்.
