சென்னை: பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா, ‘முதல் முதலாய்’ என்ற இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பத்தில் அறிமுகமாகியுள்ளார். பாடல் எழுதி ரவிச்சந்திரன் நிவாஸ் இசை அமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். ரிஷி தேவா, கைரா இணைந்து நடனமாடியுள்ளனர். மெலோடி, ராப் இசை கலந்துள்ள இந்த ஆல்பத்தில், ராப் பாடலை ஆதித்யா பாடியிருக்கிறார். ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் நடனப்பயிற்சி அளித்துள்ளார். சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘ஜென்டில்மேன்’ என்ற படத்தில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்ற பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனது சிறுவயதில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடினார். இப்போது பிரபுதேவா மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ என்ற ஆல்பத்தின் பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார்.
