தெலங்கானா மாநில திரைப்பட விருது விழாவில், `தி கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா, திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் கூறுகையில், ‘ஒருகாலத்தில் எனது நடிப்புக்காக பல்வேறு தரப்பினரால் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது எனது நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. இதை ஒரு மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போல் உணர்கிறேன். ராகுல் ரவீந்திரன் இயக்கிய ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ போன்ற படத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது மிகவும் சிறப்பானது.
ஏனெனில், அதுபோன்ற படங்கள் நிறைய வருவதை இதுபோன்ற விருது ஊக்குவிக்கும். இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த ராகுல் ரவீந்திரனுக்கு நன்றி. நான் இங்கு மருமகளாக வருவதற்கு முன்பு ஒரு மகளாக வந்தேன். அப்போது நிறைய அன்பை வாரி வழங்கினீர்கள். இப்போது ஒரு மருமகளாக உங்கள் முன்னால் நிற்கிறேன். பெருமையாக இருக்கிறது. உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்’ என்றார்.
