மலையாளத்தில் ரீமேக் ஆகிறது ஆதார்

 

சென்னை: கடந்த 2022ல் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஆதார்’. இது மலையாளத்தில் ‘ஆதார்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார். கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். இதுகுறித்து ராம்நாத் பழனி குமார் கூறுகையில், ‘தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள், ‘ஆதார்’ படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். கார்ப்பரேட் உலகம் சாமானிய மனிதர்களை எப்படி கஷ்டப்படுத்துகிறது.

என்பதை உண்மைக்கு நெருக்கமாக ‘ஆதார்’ படம் சொல்கிறது. கருணாஸ் நடித்த ‘திண்டுக் கல் சாரதி’ என்ற படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்த ராம்நாத் பழனிகுமார், பிறகு கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ஜீவா ஜோடியாக நயன்தாரா நடித்த ‘திருநாள்’ ஆகிய படங்களை எழுதி இயக்கி இருந்தார். ‘ஆதார்’ படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Related Stories: