அப்பா மம்மூட்டியுடன் நடிக்க விருப்பம்: துல்கர் சல்மான்

சென்னை: தனது தந்தை மம்மூட்டியுடன் நடிக்க விரும்புவதாக துல்கர் சல்மான் கூறியுள்ளார். துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்துள்ள படம், ‘சீதா ராமம்’. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற துல்கர் சல்மான் கூறும்போது, ‘இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது, இதற்கு எந்த தலைப்புமே வைக்கவில்லை. இப்போதுதான் தலைப்பு வைத்துள்ளனர். இது காதல் கதை படம். அப்பா மம்மூட்டியுடன் நான் நடிக்காமல் இருப்பது ஏன் என்று கேட்கிறார்கள். அப்பாவுடன் சேர்ந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இதை அவரிடம் நான் பலமுறை சொல்லிவிட்டேன். அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அவருக்கு ஓ.கே என்றால் கதை கேட்பதுதான் பாக்கி. தற்போது அவரது சம்மதத்துக்காக காத்திருக்கிறேன். விரைவில் நாங்கள் இணைந்து நடிப்போம்’ என்றார்….

The post அப்பா மம்மூட்டியுடன் நடிக்க விருப்பம்: துல்கர் சல்மான் appeared first on Dinakaran.

Related Stories: