விஜய் சேதுபதி வெளியிட்ட லாரா பர்ஸ்ட் லுக்

சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகிறது ‘லாரா’. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார். எம். கார்த்திகேசன் தனது எம். கே பிலிம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்கள் எம்.கார்த்திகேசன், முத்தமிழ்.

‘லாரா ‘ படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து, லாரா தலைப்பு மற்றும் கதைக்களம் பற்றி கேட்டு விஜய் சேதுபதி பாராட்டினார்’ என படக்குழு தெரிவித்துள்ளது.

The post விஜய் சேதுபதி வெளியிட்ட லாரா பர்ஸ்ட் லுக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: