கொளத்தூர் அருகே பரபரப்பு; மதுவில் விஷம் கலந்து கணவன் கொலை: மனைவி, கள்ளக்காதலனிடம் போலீஸ் விசாரணை

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரபத்திரன் கொட்டாயைச் சேர்ந்தவர் சக்திவேல்(37), கூலி தொழிலாளி. நேற்று காலை இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது தம்பி முத்துசாமி கொளத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் இறந்த சக்திவேலின் மனைவி புகழரசி (27)க்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இதனை சக்திவேல் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சக்திவேல் குடித்த மதுவில் விஷம் கலந்து புகழரசியும் அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரும் கொடுத்து கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் சக்திவேல் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழரசி மற்றும் முத்துகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கொளத்தூர் அருகே பரபரப்பு; மதுவில் விஷம் கலந்து கணவன் கொலை: மனைவி, கள்ளக்காதலனிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: