பூனி பியர்ஸ்: கார்டியன் கோட் திரை விமர்சனம்

சுட்டி டிவியில் வருத்தப்படாத கரடிகள் சங்கம் என்னும் கார்ட்டூன் உங்கள் வீட்டு குழந்தைகள் விரும்பி பார்ப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த கார்ட்டூன் திரைப்பட வெர்ஷன் தான் இந்த பூனி பியர்ஸ் : கார்டியன் கோட். லின் யோங்சாங், ஷாவோ ஹெக்கி இருவரின் இயக்கத்தில் ஷாங் பிங்சுங் , ஷாங் வெய், டான் ஸியோ நடிப்பில் கோடைகால சிறப்பாக வெளியாகி இருக்கிறது.

சிறுவயதிலேயே காட்டுக்குள் இருக்கும் ஒரு ஆய்வுக்கூடத்தில் நிகழும் தீ விபத்தில் தன் அன்னையை பறிகொடுத்த இரண்டு குட்டி கரடிகள். மிகவும் கஷ்டப்பட்டு தங்களது வாழ்க்கையை காட்டில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு கரடிகளும் ஆர்வக்கோளாறு காரணமாக ஒரு அறிவியல் கண்காட்சிக்குள் மாறுவேடம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைய அங்கே சூழல் இவர்களை ஒரு ஆய்வுக் குழுவுடன் இணைக்கிறது. ஆய்வுக் குழுவுடன் இணைந்தே பயணிக்கும் இரு கரடிகளுக்கும் பல ஆபத்துகள் வந்து சேர்கின்றன. ஏன் எதற்காக பின்னணி கதை என்ன என்பது மீதி கதை.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கேள்வியும் இல்லாமல் ஒரு கார்ட்டூன் பார்க்க போகிறோம் என நினைத்துக் கொண்டு பெரியவர்கள் செல்வது நல்லது. படத்தின் கதை எந்திரன், ஸ்பைடர் மேன், மெர்சல், இப்படி பல கதைகளின் கலவையாகவே தோன்றலாம். சுட்டி டிவியில் இந்த வருத்தப்படாத கரடிகள் சங்கம் கார்ட்டூன் விரும்பி பார்க்கும் குழந்தைகள் இந்த படத்தை இன்னும் உற்சாகமாக ரசித்து பார்ப்பார்கள்.

எப்போதும் போதை, வன்முறை, ரத்தம் சிந்தும் சண்டை காட்சிகள் என அதிகம் நிறைந்திருக்கும் சினிமாவில் இப்படிப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் தான் அவ்வப்போது குடும்பங்களுக்கான மற்றும் குழந்தைகளுக்கான படமாக ஆறுதல் தருகிறது. அதிலும் அம்மா பாசமும் ஒன்றிணைய கதை பல இடங்களில் உணர்வுக் கலவையாகவும் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில் ஒரு ஒன்றரை மணி நேரம் நீங்களும் குழந்தையாக மாறி உங்கள் குழந்தைகளுடன் பார்த்த மகிழ மிகச் சரியான படமாக வந்திருக்கிறது ‘ பூனி பியர்ஸ்: கார்டியன் கோட்.

The post பூனி பியர்ஸ்: கார்டியன் கோட் திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: