100 ஆண்டுகள் பழமையான கீரமங்கலம் பாட்டர் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

ஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் 100 ஆண்டு பழமையான பாட்டர் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பட்டவய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் பொதுமக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது. ஆனால் பட்டவய்யனாருக்கு முந்தைய பாட்டர் கோயில் ஒன்று உள்ளது என்பது செவி வழி செய்தியாக அப்பகுதி மக்கள் கேள்விப்பட்டு பாட்டர் கோயில் இருக்கும் இடம் தெரியாமல் தேடி கொண்டிருந்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பாக வழிபாடு நடத்திய பாட்டர் கோயில் இருந்த இடத்தில் தற்போது விவசாயம் நடந்து வருவதை அறிந்து கோயில் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இதைதொடர்ந்து பாட்டர் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டனர். இதைதொடர்ந்து திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதனால் பாட்டர் கோயிலுக்கு குதிரை, யானை மற்றும் பரிவார தெய்வங்கள் சிலைகள் செரியலூரில் உள்ள மண்பாண்ட கலைஞர்களிடம் செய்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பாட்டர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: