முலாம்பழ முந்திரி டிலைட்

என்னென்ன தேவை?

முலாம் பழம் சிறியது - 1,

திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்,

வெல்லம் - 1 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா

1 சிட்டிகை, முந்திரி - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

முலாம் பழத்தை தோல், விதை நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு முலாம் பழம், முந்திரியை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தேன் போல வந்ததும் இறக்கி சிறிது ஆற விட்டு, முலாம் பழக்கலவையில் சேர்த்து, அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து, மேலே சிறிது முந்திரியை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு:

நுங்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழத்திலும் செய்யலாம்.

Related Stories: