அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு அபிஷேகம்

அவிநாசி: அவினாசியில் புகழ் பெற்ற பெருங்கருணைநாயகி உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதத்தின் முதல் வாரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் மரிக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதம் கனி வகைகள், ஆடியில் கரும்பு சர்க்கரை, ஆவணியில் பன்னீர், புரட்டாசியில் தயிர், ஐப்பசியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

 

இதேபோல் நேற்று கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் என்று சொல்லப்படும்  திங்கள் கிழமையான நேற்று சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில், 108வலம்புரி சங்குகள் புனித நீரால் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் செய்து, அவிநாசியப்பருக்கு சங்கு அபிஷேகம் செய்யப்பட்டு கூட்டு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: