காசி கொள்ளன்கொட்டாய் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தர்மபுரி: தர்மபுரி அருகே காசி கொள்ளன்கொட்டாய் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே ராமாபுரம் காசி கொள்ளன்கொட்டாய், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா, கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18ம் தேதி முளைப்பாளிகையுடன் கங்கை தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பகல் 2 மணிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கரிகோலம் புறப்பாடு, மாலை 5 மணிக்கு வாஸ்து பூஜைகள், இரவு 7 மணிக்கு முதல் யாக சாலை பூஜை, மகா சங்கல்பம், வேத பாராயணம் நடந்தது.

இரவு 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், நாடி சந்தானம் பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு 2ம் கால பூஜை, ருத்ர ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு விமான மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து 9 மணிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: