இந்த வாரம் என்ன விசேஷம்?

நவம்பர் 17, சனி  

Advertising
Advertising

வளர்பிறை நவமி. கரிநாள். முடவன் முழுக்கு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ  சண்முகர் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

நவம்பர் 18, ஞாயிறு  

தசமி. மணச்சநல்லூர் ஸ்ரீ ருக்மிணி கல்யாண வைபவம். திருச்சி ஸ்ரீ  ராமபஜனை மடம். சுவாமி மலை ஸ்ரீ  முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.

நவம்பர் 19, திங்கள்  

வளர்பிறை ஏகாதசி. கார்த்திகை முதல் சோமவாரம். கரிநாள். திருக்கடவூர். திருப்பனந்தாள் வேளூர் திருவையாறு 1008 சங்காபிஷேகம். ஸ்ரீ ரங்கம் கைசிக ஏகாதசி. வள்ளியூர் ஸ்ரீ  முருகப்பெருமான் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ  நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

நவம்பர் 20, செவ்வாய்  

துவாதசி. மஹா பிரதோஷம். யாக்ஞவல்கிய ஜயந்தி. திருவண்ணாமலை ஸ்ரீ  அருணாசல நாயகர் மஹா ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ  சண்முகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

நவம்பர் 21, புதன்  

திரயோதசி. சுவாமிமலை ஸ்ரீ  முருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

நவம்பர் 22, வியாழன்  

பௌர்ணமி. திருவண்ணாமலை கிரிவலம். துளசி விரதம். பரணி தீபம். கார்த்திக கௌரி விரதம். திருமங்கையாழ்வார், கணம்புல்லர்.

நவம்பர் 23, வெள்ளி  

திருக்கார்த்திகை. திருவண்ணாமலை ஸ்ரீ  அருணாசலேஸ்வரர் மஹா தீபம்.

Related Stories: