திருவக்கரை வக்ரகாளி

ஆதித்ய சோழரும், பராந்தகரும், கண்டராதித்தரும், செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து சமைத்த கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதிஉக்கிரமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கி தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள். வக்ராசுரனையும், அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர். வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அமர்ந்தாள். இன்றும் அந்த திருவெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவும், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதி நெருங்கும் போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம்  விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: