பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், தஞ்சாவூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற மாணவி, டி.பார்ம் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவர், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட பவித்ரா, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவிகள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. உடனே இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறினர்.    அதன்பேரில், பல்கலை ஊழியர்கள் மற்றும் பல்லாவரம் போலீசார், விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பவித்ராவின் பெற்றோர் தஞ்சாவூரில் இருந்து வந்த பிறகே தற்கொலைக்கான முழுக்காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்….

The post பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: