வெப்சீரிஸில் அமைரா தஸ்தூர்

மும்பை: தனுஷுடன் அனேகன், பிரபு தேவாவுடன் பகீரா படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். இப்போது வெப்சீரிஸில் நடித்துள்ளார். எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட்டின் ரித்தேஷ் சித்வானி, காசிம் ஜக்மகியா மற்றும் ஃபர்ஹான் அக்தர் தயாரிப்பில், எஸ். ஹுசைன் ஜைதி எழுதிய வெப்சீரிஸ், ‘பம்பாய் மேரி ஜான்’. ஷுஜாத் சவுதாகர் இயக்கிய இந்த தொடரில், அமைரா தஸ்தூருடன், கே.கே. மேனன், அவினாஷ் திவாரி, கிருத்திகா கம்ரா, நிவேதிதா பட்டாச்சார்யா நடித்திருக்கிறார்கள். 10 பாகங்கள் அடங்கிய இந்த இந்தி ஒரிஜினல் தொடர் செப்டம்பர் 14 அன்று இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போர்த்துகீசு, ஜப்பான், போலிஷ், லத்தீன் ஸ்பானிஷ், காஸ்டிலியன் ஸ்பானிஷ், அரபிக் மற்றும் துருக்கி. போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் பிரைம் வீடியோவில் திரையிடப்படும். இந்த தொடரானது, சீன, செக், டேனிஷ், டச்சு, பிலிப்பினோ, ஃபின்னிஷ், க்ரீக், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்கம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய், உக்ரேனிய மற்றும் வியட்நாமீஸ் உட்பட பல்வேறு அயல்நாட்டு மொழிகளில் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்.

The post வெப்சீரிஸில் அமைரா தஸ்தூர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: