அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் நியமனம்: முதல்வருக்கு காதர் மொகிதீன் கடிதம்

சென்னை: அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகளாக எம்பிக்கள் இருவர் நியமிக்கபட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காதர் மொகிதீன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தாங்கள் அறிவித்திருக்கும் சமூகநீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பில் சேர்ந்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுத்து எழுதிய கடிதம் வரப்பெற்று மகிழ்ந்தோம். நாட்டின் 73வது குடியரசு தின விழாவின் போது, தேசிய அளவில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகள் நிலை நிறுத்தும் லட்சியத்திற்காக, திமுக ‘சமூகநீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு’ உருவாக்குவதற்கு முனைந்திருக்கிறது என்று தாங்கள் அறிவித்தீர்கள்.  இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக, ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் சார்பில், காணொலி மூலம் நடந்த பாராட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் முகமது பஷீர் எம்.பி. பங்கேற்றுச் சிறப்பித்தார். சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகளாக எம்பிக்கள் முகமது பஷீர், நவாஸ் கனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு சார்பில் உருவாக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரும் கோரிக்கைகள் பற்றிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, தங்களின் கவனத்துக்கு அனுப்ப இருக்கிறோம்.தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சி முழு வெற்றி பெற வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் நியமனம்: முதல்வருக்கு காதர் மொகிதீன் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: