தரங்கம்பாடி பொறையார் தபால் அலுவலகங்களில் 2ம் தேதி பரிவர்த்தனை இல்லா நாள்

 

தரங்கம்பாடி, ஜூலை 31: மயிலாடுதுறை மாவட்டம், தரங்tகம்பாடி, பொறையார் தபால் அலுவலகங்களில் 2ம் தேதி எவ்வித பரிவர்த்தனையும் கிடையாது என்று தபால்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய தபால்துறையின் மென்பொருள் ஆகஸ்டு 4ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது.

இந்த புதிய தரம் உயர்த்தபட்ட மென்பொருள் க்யூ ஆர் மூலம் பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு வசிதிகள் அறிமுகம் செய்யபட உள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்த ஆகஸ்டு மாதம் 2ம் தேதி சனிக்கிழமை எந்த வித பரிவர்த்தனை இல்லா நாளாக அறிவிக்கபட்டுள்ளது. அதனால் தரங்கம்பாடி மற்றும் பொறையார் தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் தபால் பரிவர்த்தனை மற்றும் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தரங்கம்பாடி பொறையார் தபால் அலுவலகங்களில் 2ம் தேதி பரிவர்த்தனை இல்லா நாள் appeared first on Dinakaran.

Related Stories: