சோமரசம்பேட்டையில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரை

திருச்சி,டிச.15: மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி’’ பரப்புரையை ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா தலைமை வகித்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக அரசின் சாதனைகள் மற்றும் ரங்கம் தொகுதியில் செய்து கொடுத்துள்ள பல்வேறு திட்டப்பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கிளை, ஒன்றிய, மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பாக முகவர்களுக்கு எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் தேவைகள் அறிந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும், 2026ல் திமுக ஆட்சி மீண்டும் மலரவும் அயராது பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

Related Stories: