மேலும், ‘சாக்லேட்’ படப்பிடிப்பில், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையைக் கழற்றிவிட்டு நடனமாடுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், ‘நான் என்னுடைய சொந்த வீட்டிலேயே பல ஆண்டுகளாகத் துன்புறுத்தப்படுகிறேன்.
செவ்வாய்க்கிழமை அன்று எனது நிலைமை மிகவும் மோசமானதால், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இந்தத் தொல்லைகள் தொடர்வதால் என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலைக்கு ஆட்களை நியமித்தால், அவர்கள் திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்’ என்று கண்ணீருடன் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post யாராவது எனக்கு உதவுங்கள்… சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்?: கதறும் நடிகை தனுஸ்ரீ தத்தா appeared first on Dinakaran.
