தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், காலை 8.15 மணி வரையிலும் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் அங்கு வந்தார். அமைச்சர் அவரிடம், `ஏன் டாக்டர்கள் உட்பட யாரும் இல்லை என கேட்டார். பதிவேடுகளை கொண்டு வருமாறு கூறி பார்வையிட்டார். பின்னர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வநாயகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, `நான் இங்கு காலை 8 மணிக்கு வந்து விட்டேன். சிறப்பான கட்டமைப்புடன் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால், பணியில் இருக்க வேண்டியவர்கள் அலட்சியமாக உள்ளனர். டாக்டர்கள், நர்ஸ்கள் யாரும் இதுவரை பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இந்நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு பின் இரவு பணியில் இருந்த டாக்டர், நர்ஸ், காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வட்டார மருத்துவ அலுவலரிடம் விளக்க கேட்கப்பட்டுள்ளது.
The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு பணியில் இல்லாத டாக்டர், நர்ஸ், காவலர் சஸ்பெண்ட் : அமைச்சர் அதிரடி appeared first on Dinakaran.
