விருத்தாசலம், டிச. 17: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு முடிந்து காரில் புறப்பட்டபோது திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன் அவரது பேச்சு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் காரில் இருந்து இறங்கியபோது அவருடன் வந்த நாதக நிர்வாகிகள் ரங்கநாதனை சரமாரியாக தாக்கினர். சீமானும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக நிர்வாகி ரங்கநாதன் தன்னை சீமான் உள்பட நாதகவினர் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில் சீமான் உள்பட 15 பேர் மீது ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நாதக நிர்வாகி ராஜதுரை அளித்த புகாரின் படி, ரங்கநாதன் மீதும் வழக்கப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
