மீனாட்சி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வழக்கு

மதுரை: கோவையைச் சேர்ந்த சுரேஷ்பாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரபல கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும்போது வேள்வி பூஜைகளுக்கு சமஸ்கிருத வேள்வி ஆசிரியர்கள் தான் அழைக்கப்படுகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாக்களில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில்லை. வரும் ஜனவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது.

இந்த குடமுழுக்கு மற்றும் வேள்வி பூஜைகளை தமிழில் நடத்துமாறும், இந்நிகழ்வுகளில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘‘மனுதாரரின் மனுவை அறநிலையத்துறை அதிகாரிகள் 2 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: