அரியலூர்: அரியலூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அரசு பஸ் நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்டது. அதில் 20 பயணிகள் இருந்தனர். பஸ் காசாங்கோட்டை அருகே காலை 8.10 மணியளவில் சென்றபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்துக்கு வழிவிடும் போது சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் பஸ் உரசியது. இதில் டிரான்ஸ்பார்மரில் இருந்து நெருப்புடன் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர். அப்போது டிரான்ஸ்பார்மரில் இருந்து தீ பஸ்சுக்குள் பரவியது. டிரைவர் ராஜ்குமார், பஸ்சை லாவகமாக பின்பக்கமாக இயக்கும் போது பின்பக்க டயரில் தீப்பிடித்து எரிந்தது. கிராமமக்கள், பம்ப்செட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பஸ் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
