திருமலை: ஆந்திர மாநிலம் சட்டீஸ்கர் வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த வேட்டையில் இதுவரை பல மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் ஏலூரு மலைத்தொடரில் கொய்யலகுடம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று அதிகாலை துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தெலங்கானாவை சேர்ந்த கஜர்லா ரவி உதய், ஆந்திராவை சேர்ந்த அருணா(54)உள்பட 3 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் அருணாவின் கணவர் சலபதி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல திருப்பதி அலிபிரி குண்டு வைத்த வழக்கில் முக்கிய நபர் ஆவார். இவர் மீது ஸ்ரீகாகுளம் அருகே துப்பாக்கிச் சூட்டில் சில ஆண்டுகள் முன்பு உயிரிழந்தார்.
The post ஆந்திர வனப்பகுதியில் அதிகாலையில் அதிரடி 3 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுகொலை appeared first on Dinakaran.