இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று அவரால் பாராட்டப் பெற்றவர். இவருடைய இழப்பு அறிவியல் ஆய்வுதளத்தில் இயங்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் வாடும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.
